செய்திகள்

முடிந்தால் தங்களுடன் மோதி வெற்றிப்பெற்றுக் காட்டுமாறு மஹிந்தவுக்கு ரணில் சவால்

தாம் மஹிந்த அணியுடன் மோத தயார் எனவும் முடிந்தால் தங்களுடன் போட்டிக்கு வருமாறு மஹிந்தவுக்கு கோரிக்கை விடுப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று தம்புள்ள பகுதியில் மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் நாம் யாருடனும் மோத தயார். மஹிந்த வந்தாலும் நாம் தயார். முடிந்தால் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட்டு காட்டுமாறு நான் மஹிந்தவுக்கு கோரிக்கை விடுக்கின்றேன். ஏற்கனவே ஜனவரி 8ம் திகதி மஹிந்தவையும் அவரின் ஆதரவாளர்களையும் நாம் தோற்கடித்துவிட்டோம். வேண்டுமென்றால் மீண்டும் தோற்கடிப்போம். என அவர் தெரிவித்துள்ளார்.