செய்திகள்

முதலமைச்சரின் தலையீட்டையடுத்து முடிவுக்கு வந்தது கேப்பாபுலவு போராட்டம்

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் தம்மை தமது சொந்த இடத்தில் குடியமர்த்துமாறு மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. வடமாகாண முதலமைச்சரின் உறுதிமொழியுடனும் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், வடமாகாண மீள்குடியேற்ற அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க   முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

முற்றுமுழுதான, விருப்பமற்ற நிலையில் தம்மால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தம்மை கேட்டதற்கிணங்க, அவர்களுக்கு இறுதிச் சந்தர்ப்பம் அழிப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளதுடன், முதலமைச்சரால் கேட்கப்பட்ட மூன்று மாத காலம் அதிகமாக உள்ளதாகவும் தமக்கு அதற்கு முன்னர் சரியான தீர்வை பெற்றுத்தர வேண்டுமெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர்களுக்கான தீர்வுகள் பெற்றுத் தருவதாக வடமாகாண முதலமைச்சர் மற்றும் எதிர்கட்சித்தலைவர் ஆகியோர் தமக்கு உறுதியான நிலைப்பாட்டை தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர்கள், மீண்டும் ஏமாற்றமளிக்கும் விடயமாக இது அமைந்தால் நிச்சயமாக சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் எனவும் கேப்பாபுலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

muli1-600x450

n10