செய்திகள்

முதலமைச்சர் -ஆளுநர் சந்திப்பு எதிர்பார்த்தபடி இடம்பெறவில்லை

 இதனையடுத்து கொழும்பிலிருந்து விடுக்கப்பட்ட அவசர உத்தரவையடுத்து வடமாகாண ஆளுநர் பள்ளிகக்கார  வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தன்னை வந்து சந்திக்குமாறு நேற்றிரவு அழைத்திருந்த போதிலும் அந்த சந்திப்பு எதிர்பார்த்தபடி இன்று இடம்பெறவில்லை.

இன்று ஆளுநரை சந்திப்பதற்கு விக்னேஸ்வரன் இணங்கியிருந்த போதிலும் இன்றை தினம் பொதுமக்கள் சந்திப்பு தினமாகையினாலும் வழமைக்கு மாறாக ஏராளமான பொதுமக்கள் முதலமைச்சரை சந்திப்பதற்கு வருகை தந்திருந்தமையினாலும் ஆளுனருடனான சந்திப்பை முதலமைச்சர் தவிர்த்துக் கொண்டதாக முதலமைச்சர் வட்டாரங்கள் தெரிவித்தன.