செய்திகள்

முதலமைச்சர் பதவியிலிருந்த பிரசன்னவை நீக்க திட்டம்

மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை அந்த பதவியிலிருந்து நீக்குவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முhகாண சபை உறுப்பினர்களை கொண்டு அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை நிறைவேற்றி அவரை அந்த பதவியிலிருந்து நீக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இந்த விடயம் தொடர்பாக மாகாண சபை உறுப்பினர்களுக்கும் அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவருக்குமிடையே கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக தானும் அறிந்துள்ளதாவும் ஆனால் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தான் தயாராகவே இருப்பதாகவும் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக செயற்படும் குழுவில் பிரசன்ன ரணதுங்கவும் பிரதானமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.