செய்திகள்

முதலமைச்சர் மீது வழக்கு தொடரப்படும் – அன்புமணி ராமதாஸ்

அதிமுக பிரசார கூட்டத்தில் 5 பேர் உயிரிழந்தது தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா மீது வழக்கு தொடரபோவதாக பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக சார்பில் போட்டியிடும் திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்ட வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் வேலூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், ஆளுங்கட்சிக்கு ஆதராவாக செயல்படும் அதிகாரிகளை மாற்ற கோரி தேர்தல் ஆணையத்தில் அளித்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டினார். அதிமுக பொதுக்கூட்டத்தில் உயிரிழந்த 5 பேரை பற்றி முதலமைச்சர் ஜெயலலிதா கவலைப்படவில்லை எனவும் உயிரிழப்பு தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா மற்றும் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீது 306ன் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

N5