செய்திகள்

முதலாம் தவணை விடுமுறைக்காக பாடசாலைகள் இன்று முதல் மூடப்பட்டது

நாடாளாவிய ரீதியிலுள்ள அரசாங்கப் பாடசாலைகள் யாவும் முதலாம் தவணை விடுமுறைக்காக இன்று புதன்கிழமை மூடப்படுவதாகக் கல்வியமைச்சு அறிவித்துள்ளது. யாழ்.மாவட்டத்திலுள்ள பாடசாலைகளிலும் இன்றைய தினம் புதன்கிழமை (08.04.2015) மாணவர் தேர்ச்சி அறிக்கைகள் கையளிக்கப்பட்டு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இவ்வாறு மூடப்படும் பாடசாலைகள் இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக ஏப்ரல்-20 ஆம் திகதி திறக்கப்படவுள்ளன.

இதேவேளை,முதலாம் தவணை விடுமுறைக்காக முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் 10 ஆம் திகதி முதலாம் தவணைக்காக மூடப்படவுள்ளன. இவற்றின் கல்வி நடவடிக்கைகளும் மீளவும் ஏப்ரல்-20 ஆம் திகதி ஆரம்பமாகுமெனவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ்.நகர் நிருபர்-