செய்திகள்

முதலாவது டெஸ்ட் : இங்கிலாந்து அணியிடம் நியூசிலாந்து தோல்வி

இங்கிலாந்து-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லோட்சில் இடம்பெற்றது.
இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 389 ஓட்டங்களையும்,நியூசிலாந்து 523 ஓட்டங்களையும்எடுத்தன. 134 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 4-வது நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 429 ஓட்டங்களை எடுத்திருந்தது.
அலஸ்டயர் குக் 153 மொயீன் அலி 19 ஓட்டங்களுடனும்களத்தில் இருந்தனர். நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய குக் 162 ஓட்டங்களில்ஆட்டம் இழந்தார். அடுத்து களம் கண்ட ஸ்டூவர்ட் பிராட் 10 ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓட்டம்எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 478 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்து அணி தரப்பில் டிரென்ட் பவுல்ட் 5 விக்கெட்டும் டிம் சவுதி மேட் ஹென்ரி தலா இரண்டு விக்கெட்டுகiளையும் வீழ்த்தினார்கள்.

newzealand

பின்னர் 345 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் மார்ட்டின் கப்தில் டிம் லதாம் ஆகியோர் ஓட்டம் எதனையும் எடுக்காமல் ஆட்டம் இழந்தனர். அடுத்து nராஸ் டெய்லர் 8 வில்லியம்சன் 27 பிரன்டன் மெக்கல்லம் ஓட்டம்எடுக்காமல் ஆட்டம் இழந்தனர்.

6-வது விக்கெட் இணையான வாட்லிங் கோரி ஆண்டர்சன் தோல்வியை தவிர்க்க சிறிது நேரம் போராடினார்கள். வாட்லிங் 59 ஓட்டத்திலும் கோரி ஆண்டர்சன் 67 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தனர். பின்னர் நியூசிலாந்து அணி 67.3 ஓவர்களில் 220 ஓட்டங்களை எடுத்து ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது