செய்திகள்

முதலாவது போட்டிக்கான பந்துவீச்சாளர்கள் குறித்து இன்னமும் இறுதிமுடிவில்லை.

நாiளை உலகிண்ணத்தின் முதலாவது போட்டியில் நியுசிலாந்தை சந்திக்கவுள்ள இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மத்யுஸ் முதலாவது போட்டியில் இலங்கை அணியில் இடம்பெறவுள்;ள வீரர்கள் யார் என்பதை உறுதியாக தெரிவிக்க மறுக்கின்றார்.
உலககிண்ண போட்டிகளுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள இலங்கை அணி குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன,உபுல் தரங்க அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளமையும்,ஜீவன் மென்டிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதும் குறிப்பாக கடும் விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது.
நியுசிலாந்துடனான போட்டிகளில் அணி பெருமளவிற்கு மூன்று முன்னணி பந்துவீச்சாளர்களையே பயன்படுத்தியுள்ளது.மிகுதி பந்துவீச்சாளர்களாக சகலதுறை ஆட்டக்காரர்களையே பயன்படுத்தி வருகின்றது.
அணிதலைவரும், திசாரா பெரேராவும் தங்களுக்கிடையில் சில ஓவர்களை பகிர்ந்துகொண்டுள்ளனர். இதுதவிர தில்சானும், ஜீவன்மென்டிசும் பந்துவீசியுள்ளனர்.
முன்னனி பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவது குறித்து நாங்கள் சிந்தித்துள்ளோம்,துடுப்பாட்ட வரிசையிலும்,பந்துவீச்சிலும் ஆழம் வேண்டுமென்பதற்காகவே நாங்கள் சகலதுறை ஆட்டக்காரர்களை பயன்படுத்தினோம் என்கிறார் மத்தியுஸ்,ஆடுகளத்தின் தன்மை மற்றும் எதிரணியை பொறுத்து அணியை தெரிவுசெய்வோம், நான்கு பந்துவீச்சாளர்களும் ஏழு துடுப்பாட்ட வீரர்களும் இடம்பெறலாம் என்கிறார் அவர்.
முத்தையா முரளீதரன் உட்பட பல முன்னாள் வீரர்கள் அணி முக்கிய பந்துவீச்சாளர்களை பயன்படுத்தவேண்டு;ம், பகுதி நேர பந்துவீச்சாளர்களை நம்பியிருக்க கூடாது என கருத்துதெரிவித்துள்ளனர்.
எனினும் அணியின் தந்திரோபாயத்தில் பிழையில்லை விiளாடிய விதத்திலேயே பிழையுள்ளது என்கிறார் மத்தியுஸ்
பெருமளவு மாற்றங்கள் அவசியமில்லை, அணுகுமுறை மாற்றமே அவசியம்,சில தோல்விகளால் மனோநிலை பாதிக்கப்பட்டிருக்கும்,கடுமையாக போராடவேண்டியிருக்கும், நாங்கள் புதியதாக ஆரம்பிக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்,
இலங்கை அணியின் இறுதி ஓவர் பநதுவீச்சே கடந்த போட்டிகளில் பலவீனமா காணப்பட்டது.மலிங்க இல்லாததே அதற்கு காரணம்,மலிங்க முதலாவது போட்டியில் விளையாடுவார் என்பதை அவர் உறுதிசெய்துள்ளார்.
எமது நடுவரிசையின் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக ஆடவில்லை,நியுசிலாந்துடனான போட்டிகளில் வெல்வதற்கு பதில் தோற்பதற்கான வழியையே நாங்கள் தேடினோம்,என அவர் குறிப்பிட்டுள்ளார்.