செய்திகள்

முதலில் தேர்தல் திருத்தம் பின்னரே பொதுத் தேர்தல்: அமைச்சர் ராஜித சேனாரட்ன

புதிய அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின்படி தேர்தல் முறையில் சீர்திருத்தம் உட்பட வாக்குறுதிகளை நிறைவேற்றிய பின்னரே பொதுத் தேர்தல் நடத்தப்படும். பொது மக்களுக்கு தேர்தலைவிட வாக்குறுதிகளே முக்கியம். – இவ்வாறு அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு பொதுத் தேர்தல் குறித்து அவசரம் ஏதும் கிடையாது பாராளுமன்றத்துக்கு இன்னும் காலம் உள்ளது. இந்நிலையில் மக்கள் எதிர்ப்பார்ப்பது என்னவெனில் அரசின் 100 நாள் வேலைத்திட்டங்களுக்கு கீழ் நாங்கள் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகும்.

அந்தவகையில் வாக்குறுதிகளை நிறைவேற்றிய பின்னரே அரசு பொதுத் தேர்தலுக்கு செல்லும். இவற்றை நிறைவேற்றுவதற்கு 100 நாட்களுக்கு மேற்பட்ட காலம் எடுத்தாலும் கூட வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிய பின்னரே தேர்தல் நடத்தப்படும் – என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.