செய்திகள்

முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிக்க முடியாத நிலையில் அதிமுக, திமுக

அதிமுக மற்றும் திமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிக்க முடியாத நிலையில் இருகட்சிகளும் உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

தேமுதிக மற்றும் மக்கள்நலக்கூட்டணியின் தேர்தல்அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், கடந்த 5ஆண்டு அதிமுக ஆட்சியில் ஏரி, குளங்கள் தூர்வாரப்படவில்லை என குற்றம்சாட்டினார்.

மேலும் அதிமுக மற்றும் திமுக கட்சிகளில் யார் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கமுடியாத நிலை இருப்பதாகவும் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்தார்.

N5