செய்திகள்

முதல் டெஸ்ட் போட்டியில் முகமது ஹபீஸ் சதம்:

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முகமது ஹபீஸ் அசார் அலியின் நிதானமான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி சிறப்பான நிலையை எட்டியுள்ளது.

பங்களாதேசில்சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியிடம் ஒருநாள் தொடரை இழந்தது. இதனையடுத்து டெஸ்ட் தொடரில் தற்போது ஆடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குல்னாவில் நடைபெற்று வருகிறது. நூணய சுழற்சியில்; வென்று முதலில் ஆடிய பங்களாதேச தேச அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தது.

இரண்டாவது நாளான இன்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது. இதனால் அந்த அணியின் முதல் இன்னிங்ஸ் 332 ரன்களில் முடிவுக்கு வந்தது.

பாகிஸ்தான் தரப்பில் வகாப் ரியாஸ் யாசிர் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

CRICKET-BAN-PAK

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் பங்களாதேசிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது. துவக்க வீரர் முகமது ஹபீஸ் துவக்கம் முதலே விறுவிறுப்பாக ஆடி ஓட்டங்களை குவிப்பதில் ஈடுபட்டார். மறுமுனையில் அவருக்கு துணை நின்ற சமி அஸ்லாம் 20 ஓட்டங்களில்ஆட்டமிழந்தார். அதன்பின்ன அசார் அலியுடன் இணைந்து பந்துவீச்சாளர்களை திணறடித்த முகமது ஹபீஸ் சதம் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். நிதானமாக ஆடிய அசார் அலி அரை சதம் கடந்தார்.

இதனால் இன்றைய ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 227 ஓட்டங்களை எடுத்தது. முகமது ஹபீஸ் 137 ஓட்டங்களுடனும் அசார் அலி 65 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.