செய்திகள்

முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கட் இறுதி போட்டி: இங்கிலாந்தை 112 ஓட்ட வித்தியாசத்தில் வென்றது அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகள் பங்கு பெற்றிய முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கட் தொடரின் நேற்றைய இறுதி போட்டியில் இங்கிலாந்தை 112 ஓட்ட வித்தியாசத்தில் விழ்த்தி அவுஸ்திரேலியா தொடரை வென்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 50 பந்து பரிமாற்ற நிறைவில் 8 விக்கட் இழப்புக்கு 278 ஓட்டங்களை பெற்றது. இதில் துடுப்பாட்டத்தில் முறையே மக்ஸ்வெல் 95, மார்ஷ் 60 மற்றும் வல்க்னர் ஆட்டமிளக்காமல் 50 ஓட்டங்களையும் பந்துவீச்சில் ப்ரோட் 55 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களையும் கைபெற்றினார் .1GlennMaxwellHit

பின்னர் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 39.1 பந்து பரிமாற்றங்களில் 166 ஓட்டங்களுக்கு அணைத்து விக்கட்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இதில் துடுப்பாட்டத்தில் போபரா 33 ஓட்டங்களையும் பந்துவீச்சில் மக்ஸ்வெல் 46 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களையும், ஜோன்சன் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களையும் கைபெற்றினர்.

ஆட்டநாயகனாக அவுஸ்திரேலிய வீரர் மக்ஸ்வெல்லும் தொடர் ஆட்டநாயகனாக மற்றொரு அவுஸ்திரேலிய வீரர் MA ஸ்டார்க்கும் தெரிவு செய்யப்படனர்.

1AustraliaTrophy