செய்திகள்

முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கட் : இங்கிலாந்து 3 விக்கட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து 3 விக்கட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்று இறுதிச் சுற்றில் அவுஸ்திரேலியாவை சந்திக்கவுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியினர் ஒரு கட்டத்தில் 83-0 என்ற வலுவான நிலையில் இருந்து 48.1 ஆவது பந்து பரிமாற்றத்தில் 200 ஓட்டங்களுக்குள் சகல விக்கட்டுக்களையும் பறிகொடுத்தனர் . இதில் துடுப்பாட்டத்தில் ரஹானே 101 பந்துகளுக்கு 83 ஓட்டங்களையும் பந்துவீச்சில் ஸ்டீவென் பின் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களையும் பெற்றனர் .

eng2பின்னர் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியினர் 66-5 என்ற இக்கட்டான நிலையில் இருந்த போது 6வது விக்கட் ஜோடியாக களம் இறங்கிய ஜேம்ஸ் டைலர் மற்றும் ஜோஸ் பட்டலர் முறையே 82 மற்றும் 67 ஓட்டங்களை பெற்று இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வழியேற்படுத்தினர். இறுதியில் இங்கிலாந்து அணி 46.5 பந்துப் பரிமாற்றத்தில் 7 விக்கட் இழப்புக்கு 201 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. இதில் பின்னி 33 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை கைப்பற்றினார் .ஆட்ட நாயகனாக இங்கிலாந்து அணி வீரர் ஜேம்ஸ் டைலர் தெரிவு செய்யப்பட்டார்.tailor