செய்திகள்

முன்னாள் அமைச்சர்கள் மீதான விசாரணை: இன்டர்போல பொலிஸார் வருவார்கள்

சர்வதேச பொலிஸார் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டிற்கு வருகை தருவதற்கு பயண அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது அமைதி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக சர்வதேச பொலிஸார் நாட்டிற்கு வருகைதர வேண்டிய தேவை ஏற்படும் பட்சத்தில், இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைக்கருத்தில் கொண்டு, சர்வதேச பொலிஸாருக்கு கடவுச்சீட்டு வழங்கப்படவுள்ளதாகவும் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டார். முன்னாள் அமைச்சர்கள் சிலர் தொடர்புபட்டுள்ள மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.