செய்திகள்

முன்னாள் அமைச்சர் கெஹலியவுக்கும் சுனில் ஹந்துன்நெத்திக்கும் யாழ் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோரை ஜூலை 30 ஆம் திகதி யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அழைப்பாணையை அனுப்பி வைத்துள்ளது.

கடத்தப்பட்டு காணாமல் போனதாக கூறப்படும் மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவர் லலித் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று யாழ். நீதிவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன் போதே நீதிமன்றினால் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.