செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு மே 11 வரை விளக்க மறியல்

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை எதிர்வரும் மே 11 வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருணாகலை நீதவான் நீதிமன்றம் இன்று காலை உத்தரவிட்டுள்ளது.

சதொச நிறுவனத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோமீது குற்றம் சுமத்தப்பட்டது. ஐந்து மில்லியன் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதற்காக நிதிக் குற்றவியல் பிரிவிற்கு வாக்கு மூலமொன்றை அளிப்பதற்காக சென்றிருந்த போது நேற்றைய தினம் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.