செய்திகள்

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் வழக்கு

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் அமைச்சருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு பரிசீலணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.