செய்திகள்

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகொல்லவிடம் இன்று லஞ்ச ஆணைக்குழு விசாரணை

ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட லஞ்ச ஊழல் குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக முன்னாள்  அமைச்சர் ரோஹித அபேகொல்லவிடம் இன்று விசாரிக்கப்பட்டது.

கடந்த மாதம் 13ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கோதாபய,பசில்,நாமல் ஆகியோருக்கு எதிராக உள்ளக   ஊழல் ஆணைக்குழுவிடம் ஜேவிபி முறையிட்டிருந்தது.

திவிநேகும, ஹெஜிங் உடன்படிக்கை போன்ற விவகாரங்களில் ஊழல் இடம்பெற்று உள்ளதுடன் தேர்தல் காலங்களில் அரச சொத்துக்களை பயன்படுத்தியமை தொடர்பிலும் முறையிடப்பட்டிருந்தது.

இன்று லஞ்ச   ஊழல் ஆணைக்குழுவில் ரோஹித அபேகொல்லவிடம் விசாரணை நடந்தது.