செய்திகள்

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மகன் அமெரிக்காவில் விபத்தில் பலி

தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகாமியின் இளைய மகன் சுனந்த் ஆனந்த் அமெரிக்காவில் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த தகவலை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக சென்னை பாலவாக்கத்தில் உள்ள சிவகாமியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சவுத் கரோலீனா மாகாணத்தில் மின்னபொலீஸ் என்ற பகுதியில் சுனந்த் சென்று கொண்டிருந்த கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாகவும், இந்த சம்பவத்தில் அவர் உயிரிழந்ததாகவும் சிவகாமியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பொறியியல் பட்டதாரியான சுனந்த் ஆனந்த், அமெரிக்காவில் உள்ள கிளம்சன் பல்கலைகழத்தில் மேற்படிப்பு படித்துக்கொண்டிருந்தார். சுனந்த் ஆனந்தின் உடலைப் பெற்றுக்கொள்ள குடும்பத்தார் இன்று அல்லது நாளை அமெரிக்கா செல்லவுள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.