செய்திகள்

மொஹான் பீரிஸீக்கு எதிரான ரிட் மனுவை மீள பெறுமாறு நீதிமன்றம் அறிவுரை

 

முன்னாள் பிரதம் நீதியரசர் மொஹான் பீரிஸ் இலங்கையை விட்டு வெளியேறுவதை தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என தான் நீதிமன்றுக்கு வழங்கிய ரிட் மனுவை விசாரணைக்கான திகதி குறிப்பிடாமல் மீள பெற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டதாக மனுவை முன்வைத்த மனுதாரர் சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

தான் வழங்கிய மனுவை விசாரிக்காமல் மனுவை மீண்டும் பெற்றுக்கொள்ளுமாறு கூறும் விடயமானது இந்த அரசாங்கத்திலும் நீதித் துறை சுதந்திரம் இல்லாத நிலையையே காட்டுகிரதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.