செய்திகள்

முன்னாள் போராளிகளுக்கு முதலிடம் வழங்க இந்தியா முன்வர வேண்டும்

இந்திய அரசானது முல்லைதீவுஇ ஒட்டுசுட்டான் பகுதியில் 300 மில்லியன் ரூபா செலவில் பாரிய தொழிற் பயிற்சிமையமொன்றை அமைக்க முன்வந்துள்ளமை பெரிதும் வரவேற்பிற்குரியதொரு விடயமெனத் தெரிவித்துள்ள ஈழ மக்கள்ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா   இந்திய அரசின் இவ்வாறானஉதவிகள் எமது மக்களுக்கு மிகவும் வரப்பிரசாதமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள்இ இத்தகைய தொழிற் பயிற்சி மையத்தைஅமைத்துத் தரும் இந்திய அரசுஇ எமது தொழில் முயற்சியாளர்களுக்கு உதவிகள் வழங்க முன்வந்துள்ளதாகவும்இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் திரு. ஆ. நடராஜன் அவர்கள் கூறியிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.இது எமது மக்களின் வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்வதில் பெரும் பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதே நேரம் பொருளாதார மற்றும் சமூக ரீதியில் எமது முன்னாள் போராளிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறுபாதிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளுக்கு உதவிக் கரம் நீட்டும் வகையில் மேற்படி திட்டத்தின்போது அவர்களுக்குமுதலிடம் வழங்க நடவடிக்கை எடுப்பது காலத்தின் தேவையாகவுள்ளது. இதனை அவதானத்தில் கொண்டும்இ இந்தியஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா   கேட்டுக் கொண்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

n10