செய்திகள்

முன்னாள் வெளிவிவகார அமைச்சரிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை

ஜனவரி 8 ம் திகதி இரவு அலரிமாளிகையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் சதிப்புரட்சி முயற்சிகள் குறித்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜிஎல் பீரிசிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளதாவது.
ஜனவரி 9 ம் திகதி அதிகாலை அலரிமாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலில் நான் பங்கெடுத்தது தொடர்பாகவே இந்த விசாரணைகள் இடம்பெற்றன,
கடந்த ஏழு வருடங்களாக நான் சேவையாற்றிய ஜனாதிபதிக்கு, அவருக்கு முக்கிய ஆலோசனைகளும்,ஆறுதலும் தேவைப்பட்ட தருணத்தில்மூத்த அமைச்சர் என்ற வகையில் அவருடன் இருப்பது,இருந்தது சரியானது என்றே நான் கருதுகிறேன்,இதுஅடிப்படை மனித கடப்பாடாகும்.
நான் அன்று காலை3.30 மணிக்கு முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்திற்குள் நுழைந்தவேளை அவர் முழுமையான முடிவுகள் வெளியபகும் முன்னரே தேர்தலில் வெற்றிபெற்றவரிடம் ஆட்சிபொறுப்பை கையளிப்பது குறித்து திட்டமிட்டுக்கொண்டிருந்தார் என்பதை என்னை விசாரிக்க வந்த பொலிஸ்உத்தியோகத்தர்களிடம் தெரிவித்துள்ளனே;.
புதிய ஜனாதிபதி அவர் விரும்பும் இடத்தில் பதவியேற்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எனத முன்னிலையில் அவர் தனது செயலாளரை பணித்தார் என்பதையும், சமூகமான முறையில் ஆட்சி மாற்றம் நடைபெறவேண்டுமென எதிர்பார்த்த முன்னாள் ஜனாதிபதி இது தொடர்பாக ரணில்விக்கிரமசிங்கவிடம் பேச்சவார்த்தைகளை மேற்கொள்ளுமாறு பணித்தார் என்பதையும் பொலிஸாரிடம் தெரிவித்தேன்.
மேலும் சதிப்புரட்சி குறித்து என் முன்னிலையில் ஓரு வார்த்தை கூட பிரயோகிக்கப்படவில்லை என்பதையும்,
மேலும் அவ்வேளை அங்கு இருந்தவர்களில் எவராவது சதிப்புரட்சி முயற்சி இடம்பெற்றது என எழுத்துமூல அறிக்கை விடுத்திருந்தால் மாத்திரமே என்னை விசாரிப்பது பொருத்தமானதாக அமைந்திருக்கும் என்பதையும் அவர்களுக்கு தெரிவித்தேன், மேலும் அவ்வேளை அங்கு இருந்தவர்கள் அனைவரும் நேர்மையானவர்கள் என்பதால் இதற்கான சாத்தியமில்லை என்றும் குறிப்பிட்டேன்
நல்லாட்சி குறித்து வலியுறுத்தப்படும் தற்போதைய சூழலில் எந்தவகையான நியாயமுன்றி நான்துன்புறுத்தப்பட்டது குறித்து எனது கவலையை வெளியிட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.