செய்திகள்

முன்னிலை சோசலிசக் கட்சியினர் குடிவரவு திணைக்களத்தினுள் அத்துமீறி நுழைந்து அட்டகாசம்

முன்னிலை சோசலிசக் கட்சி (FSP) ஆதரவாளர்கள், புஞ்சி பொரளை பகுதியில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினுள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள உடமைகளுக்கு சேதம் விளைவித்துள்ளனர்.

ஒரு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அந்தக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரட்னமை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி அவரின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டிடத்திற்கு அவர்கள் சேதம் ஏற்படுத்தியதையடுத்து பொலிஸார் தலையிட்டு நிலமையயை சீர் செய்தனர்.

n10