செய்திகள்

மும்பாய் தாக்குதலின் முக்கியசூத்திரதாரியை விடுதலைசெய்தது பாக்கிஸ்தான்

2008 மும்பாய் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி என வர்ணிக்கப்படும் ஜாகியுர் ரஹ்மான் லக்வியை பாக்கிஸ்தான் பினையில் விடுதலை செய்துள்ள அதேவேளை இந்தியா அதற்கு தனது கடும் ஆட்சேபனையை தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை லக்வி விடுதலைசெய்யப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய உள்துறையமைச்சர் ராஜ்நாத் சிங் லக்வி விடுதலைசெய்யப்பட்டமை துரதிஸ்டவசமானது, ஏமாற்றமளிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
லக்விக்கு கடந்த டிசம்பரிலேயே பிணை வழங்கப்பட்ட போதிலும் அவர் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
எனினும் உயர் நீதிமன்றமொன்று அவரை அவ்வாறு தடுத்துவைக்க முடியாது என தெரிவித்து விடுதலைசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் 2008 இல் 170 ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட மும்பாய் தாக்குதலின்முக்கிய சூத்திரதாரி லக்ஸ்ஹர் இ- தொய்பா அமைப்பை சேர்ந்த ஜாகியுர் ரஹ்மான் லக்வி என இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
இந்தியா அவரை முக்கிய குற்றவாளியாக அறிவித்து நான்னு நாட்களின் பின்னர் 2008 டிசம்பர் 7 ம் திகதி அவரை பாக்கிஸ்தான் கைதுசெய்திருந்தது.