செய்திகள்

மும்பை அணியை வீழ்த்திய பெங்களூர்

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ்–ராயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.இதில் நாணயசுழற்சியில் வென்ற ரோயல் லஞ்சர்ஸ் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலியும் கெய்லும் விளையாடினர். கெய்ல் 13 ஓட்டத்தில்ஆட்டம் இழந்தார்.

எனினும் அடுத்து வந்த டிவில்லியர்ஸ் கோலி ஜோடி சிறப்பாக செயல்பட்டது. கோலி அரை சதம் அடித்தார். எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்த டிவில்லியர்ஸ் சதம் விளாசினார். இதனால் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 235 ஓட்டங்களை எடுத்தது. டிவில்லியர்ஸ் 133 ஓட்டங்களையும், கோலி 82 ஓட்டத்தினையும் பெற்று ஆட்டமிழக்காமலிருந்தனர்

236 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் பார்தீப் பட்டேல் லென்டில் சிம்மன்ஸ் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். பார்தீப் பட்டேல் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க லென்டில் சிம்மன்சுடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். 15 ஓட்டங்களை எடுத்த நிலையில் சர்மா (8.1) ஓவரில் வெளியேற அடுத்து பொல்லார்ட் அரை சதம் எடுக்க இருந்த நிலையில் (14.2) ஓவரில் 49 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

213001

அடுத்து வந்த ஹார்திக் பாண்டியா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ராயுடு (14) ஹர்பஜன் சிங் ) சுசிட்ச் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். லென்டில் சிம்மன்ஸ் 68 ரன்களுடனும் மெக் கிளெனகன் (12) ரன்களுடனும் களத்தில் இருந்தனர். குறித்த 20 ஓவர்களில் மும்பை அணியினரால் 196 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது. இதனால் பெங்களூர் அணி 39 ஓட்ட வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது