செய்திகள்

முறிகண்டி பிள்ளையார் ஆலயம் முன்பாக விபத்து: ஒருவர் பலி

முறிகண்டி பிள்ளையார் ஆலயம் முன்பாக இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று மாலை 5.40 மணியளவில் இடம்பெற்றது. ரயர் மாற்றுவதற்காக ஓரம் கட்டப்பட்ட கனரக வாகனம் மீது, மாங்குளம் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

மிகவும் வேகமாக வந்து மோதிய மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்ததுடன், மோட்டார் சைக்கிளில்பயணித்த நபர் பலத்தகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்தின் போது யாழ்பண்டத்தரிப்பைச் சேர்ந்த எஸ். கலைச்செல்வன் (வயது-26) என்பவரே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

murukandi_accident_005