செய்திகள்

முறைகேடாக இடம்பெறும் கைதுகள் குறித்து கூட்டமைப்பு கண்டனம்

முறைகேடான விதத்தில் இடம்பெறும் கைதுகளை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஊடக அறிக்கை ஒன்றினூடாக கூட்டமைப்பு தமது கண்டனத்தை வௌியிட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி மன்னார் மாவட்டத்திலிருந்து வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட சுப்ரமணியம் சிவகரன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஆழ்ந்த கரிசனை அடைவதாகவும் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இடம்பெறும் முறையற்ற கைதுகள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றில் பல கைதுகள் கடத்தப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் மிகவும் பாரதூரமான விடயங்கள் எனவும் சம்பந்தப்பட்ட தரப்பினர் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

n10