செய்திகள்

முறைகேடாக சொத்துக்களைச் சேகரித்தார்: விமல் வீரவன்ச மீது முறைப்பாடு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் பதவி வகித்த காலத்தில் முறைகேடான முறையில் சொத்துக்களை சேர்த்தார் என அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் எங்கள் தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் குடும்பத்தவர்களுக்கு எதிராக ஜே.வி.பி. முறைப்பாடு செய்துள்ள நிலையிலேயே தற்போது விமல் வீரவன்ச மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கடுவளையில், அதிசொகுசான வீடுகள் இரண்டை நிர்மாணித்தமை, அந்த பிரதேசத்தில் பல காணிகளை பலவந்தமாக கைப்பற்றியமை மற்றும் வீரவன்சவின் மனைவியினால் முறைகேடான முறையில் சொத்துக்களை குவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளே அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.