செய்திகள்

முறைகேடான தங்க விற்பனையில் ஷிராந்தி ஈடுபட்டார்: முன்னாள் டி.ஐ.ஜி.யின் மனைவி முறைப்பாடு

முறைகேடான தங்க விற்பனையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்‌ஷ மீது முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவின் மனைவி சியாமா குணவர்ர்தன இன்று லஞ்ச ஒழிப்பு ஆணைக் குழுவின் முன்பாக முறைப்பாடு செய்திருக்கின்றார்.

shyamali

சியாமா குணவர்ர்தன

திறைசேரியிலிருந்து 500 கிலோ தங்கத்தை விற்பனை செய்வதற்கு ஷராந்தி முற்படுவதாக தகவல் ஒன்று கிடைத்ததையடுத்தே தனது கணவர் வாஸ் குணவர்த்ன அது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்தார். ஆனால், இந்த விசாரணையை நடத்த வேண்டாம் என அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே இந்த மோசடி தொடர்பாக தகவல் தெரிவித்ததாகவும், தனது கணவர் அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்ததாகவும் திருமதி குணவர்த்ன தெரிவித்தார்.

அதனையடுத்தே தனது கணவரும் மகனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அவர் தன்னுடைய முறைப்பாட்டில் தெரவித்திருக்கின்றார்.