செய்திகள்

முறைப்பாடுகள் பெறும் நடவடிக்கை 24ம் திகதியுடன் நிறைவு

பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் 24ம் திகதியுடன் நிறைவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆகவே அதற்கு முன்னர் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை பதிவு செய்து கொள்ளுமாறு பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ. குணதாச கேட்டுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

பாரிய மோசடிகள், ஊழல்கள், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்யதல் போன்றன சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

n10