செய்திகள்

முற்பணம் வழங்காததால் மவுன்ஜீன் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

ஜனவசம முகாமையின்  கீழ் இயங்கும் வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஒரு மாதத்திற்கான முற்பணம் இன்று வரை வழங்கப்படவில்லை என தெரிவித்து தோட்ட தொழிலாளர்கள் இன்று காலை  8.30 மணியளவில் அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை தியகல பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா்.

சுமார் 3 மணித்தியாலயங்கள் ஆர்ப்பாட்ட்ததில் ஈடுப்பட்டனா்.

அதன்பின் பொலிஸாரின் தலையீட்டால் ஆர்ப்பாட்டகாரா்கள் கலைந்து சென்றனா்.

குறித்த முகாமையின் கீழ் இயங்கும் இந்த தோட்ட தொழிலாளர்களுக்கு ஊழியர் சேமலாபநிதி ஊழியர் நம்பிக்கை நிதி உள்ளிட்ட பல்வேறு கொடுப்பனவுகள் உரிய முறையில் வழங்குவது இல்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவா்கள் குற்றம் சுமத்தினர்.

ஒவ்வொரு மாதமும் இவ்வாறான ஒரு சம்பள பிரச்சினை ஏற்படும் எனவும் இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்மெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

DSC09263

DSC09234

DSC09227

DSC09224

DSC09223

DSC09220

DSC09218

DSC09217

DSC09215