செய்திகள்

முல்லைத்தீவில் கவனயீர்ப்பு ஊர்வலம்!

சர்வதேச மீனவர் தினத்தினை முன்னிட்டு கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்று இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றது.

ஆரோக்கியமான கடல் சுற்றுச்சூழல் அமைப்புக்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல் மற்றும் உலகில் நிலையான மீன் வளங்களை உறுதி செய்தல் எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இவ் ஊர்வலமானது சிலாவத்தை சந்தியில் இருந்து ஆரம்பமாகி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நிறைவடைந்தது.

இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமுக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செளியன், சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், மீனவர்கள் , இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

-(3)