செய்திகள்

முல்லைத்தீவில் நாளை தேர்தல்: இன்று வாக்குப்பெட்டி விநியோகம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபை தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் இன்று விநியோகிக்கப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹம்மட் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் நாளை 28ம் திகதி நடைபெறவுள்ளது. குறித்த பிரதேச சபைகளில் 20 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 95 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன்படி கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு 11 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 6 அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 90 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதுடன், புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு 9 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 5 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுவொன்றை சேர்ந்த 72 வேட்பாளர்களும் போட்டியிடவுள்ளனர்.