செய்திகள்

முல்லைத்தீவில் மாணவன் குத்திக்கொலை: மரணத்தில் முடிந்த குடும்பத் தகராறு

முல்லைத்தீவு தண்ணீரூற்று பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு, உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற வாக்குவாதமே இறுதியில் கொலையில் முடிந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். உயர்தரம் இரண்டாம் ஆண்டில் கற்கும் அண்ணனுக்கும் மற்றும் சாதாரண தரப்பரீட்சை எழுதிய தம்பிக்கும் இடையில் இந்த வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

இந்த வாய்த்தர்க்கத்தினால் அண்ணன் மீது தம்பி, தலையில் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த அண்ணன், மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதித்ததும் அங்கு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.இக்கொலைச் சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கொலை செய்ததாகக் கூறப்படும் தம்பியை இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதவான் நடராஜா சுதர்சன் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.