செய்திகள்

முல்லைத்தீவு – கொக்கிளாய் பாலம் அமைக்க நடவடிக்கை

முல்லைத்தீவு – கொக்கிளாய்ப் பாலத்தினை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலர் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கை இணைக்கின்ற முக்கிய இடமாக கொக்கிளாய் உள்ளது. இக்கிராமத்தில் பாலம் அமைப்பதன் ஊடாக வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கான போக்குவரத்து இலகுபடுத்தப்படும்.

இப்பாலம் அமைப்பதன் ஊடாக திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, பொலனறுவை ஆகிய மாவட்டங்களுக்கான போக்குவரத்து இலகுவாக்கப்படும். முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை பணிக்கும் பஸ்ஸொன்று 140 கிலோ மீற்றர் பயணிக்க வேண்டியுள்ளது. கொக்கிளாய் பாலம் அமைக்கப்படுமானால் 105 கிலோ மீற்றர் தூரமே பயணிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.