செய்திகள்

முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தால் சுவாசக் கவசங்கள் வழங்கப்பட்டன

வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தால் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு வைத்தியப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.அந்தணர் ஒன்றியத்தின் உப தலைவர் பிரபாகர குருக்கள் தலைமையில் இன்று திங்கட்கிழமை இந்தப் பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில் இந்நிகழ்வில், சி.திவாகரக் குருக்கள், ஜெ.செந்தில்நாதக் குருக்கள் ஆகியோர் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளிடம் குறித்த பொருட்களை வழங்கினர்.

வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் கனடா இந்து குருமார் ஒன்றியத்தின் அனுசரணையில் முல்லைத்தீவு அந்தணர் ஒன்றியத்தின் ஊடாக முல்லைத்தீவு வைத்தியசாலை பயன்பாட்டுக்காக சுவாசக் கவசங்களை வழங்கியது.(15)