செய்திகள்

முல்லை ஓதியமலையில் 4 குளங்களை புனரமைக்க கோரிக்கை

முல்லைத்தீவு ஒதியமலை பிரதேசத்தில் சேதமடைந்து காணப்படும் நான்கு குளங்களையும் புனரமைத்து தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு ஒதியமலை கிராமத்தில் உள்ள கருவேப்பமுறிப்பு, செம்பிக்குளம், தனிக்கல்லு, பனையமுறிப்பு ஆகிய நான்கு குளங்கள் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன.

மேற்படி குளங்களைப் புனரமைத்து தமது வாழ்வாதாரத் தொழிலான விவசாயத்தை மேற்கொள்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்தித் தருமாறு இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மிகவும் பழமை வாய்ந்த தமது கிராமத்தில் கடந்த கால யுத்தம் காரணமாக எல்லையோரக்கிராமங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்துடன் தென் பகுதியில் இருந்து பெருமளவான காட்;டு யானைகள் கொண்டு வந்து விடப்பட்டுள்ளதாகவும் அவற்றின் அட்டகாசம் அதிகரித்;துக் காணப்படுகின்றது. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்;குமாறும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.