செய்திகள்

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு

வட மாகாணத்தில் யுத்தம் உட்பட் பல்வேறு காரணங்களால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா, பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்பு நிலையமான வைகறையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதற்கட்டமாக 40 பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

இதில் இடுப்புக்குக் கீழ் இயங்க முடியாதவர்களுக்கு 1500 ரூபாவும், கழுத்துக்கு கீழ் இயங்க முடியாதவர்களுக்கு மூவாயிரம் ரூபாவும் மாதாந்தம் வழங்கப்படவுள்ளது.

இந்த ஆரம்ப நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம், வடமாகாண சுகாதார, சுதேச மருத்துவ, சமூகசேவைகள், புனர்வாழ்வளித்தல், சிறுவர் பராமரிப்பு சேவைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான அன்ரனி ஜெகநாதன், எம்.பி.நடராஜா, ம.தியாகராஜா, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி இன்பராஜ், பிராந்திய வைத்திய அதிகாரி மகேந்திரன், பிரதேச செயலாளர் கா.உதயராசா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

DSC03119 DSC03121