செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் அனுஸ்டிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் இன்று (18.5) மதியம் அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியமும் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந் நிகழ்வு வவுனியா கற்குழி மகாமாரி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்றிருந்தது.

அந்தணர் ஒன்றியத்தின் தலைவர் பிரபாகரக்குருக்கள் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ஆலயத்தின் தர்மகர்ந்தா ஐயம்பிள்ளை, தமிழ் விருட்சத்தின் தலைவர் எஸ். சந்திரகுமார் உட்பட பல பொது மக்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி ஆத்ம சாந்தி வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது இரங்கல் உரையாகளும் இடம்பெற்றிருந்தது.

001
000b