செய்திகள்

முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்வுபூர்வ அஞ்சலி

வடக்கு மற்றும் கிழக்கின் பகுதிகளில் மிகவும் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவு கூரல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

முதன்மை நிகழ்வு இறுதிப்போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்காலின் மத்தியில் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் சிவில் சமுகம்,மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

காலை 10.30 மணிக்கு பிரதான நினைவுச் சுடரை சி .வி.விக்னேஸ்வரன் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும், சிவில் அமைப்பு பிரதிநிதிகளும் ஈகைச் சுடரை ஏற்றி வைத்தனர்.

முன்னதாக காலை கீரிமலை சென்ற வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன்,அங்கு முள்ளி வாய்க்காலில் இறந்தவர்களுக்காக விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.

1 2 3 4 5