செய்திகள்

முள்ளிவாய்க்காவில் கைவிடப்பட்ட துப்பாக்கி ஹபரதுவையில் மீட்பு: பொலிஸ் விசாரணை

எரிவாயுவில் செயற்படும் துப்பாக்கியுடன் (gas operated firearm) ஒருவர் ஹபராதுவையில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். புதுவருடக்கொண்டாட்டங்கள் இடம்பெற்ற போது இவரிடம் காணப்பட்ட துப்பாக்கி ஒன்று தொடர்பில் கிடைத்த தகவலையடுத்தே பொலிஸார் இவரைக் கைது செய்திருக்கின்றார்கள்.

இதுதொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார் குறிப்பிட்ட துப்பாக்கி விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவருடையது எனவும், இறுதிப் போரின் பின்னர் முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். குறிப்பிட்ட துப்பாக்கி னைது செய்யப்பட்டவரிடம் எவ்வாறு வந்தது என்பதையிட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றார்கள்.