செய்திகள்

முழுக்குடும்பத்தையும் இழந்த அதிர்ச்சியிலிருந்து என்னால் மீள முடியாமலுள்ளது

த நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்- தமிழ்வடிவம் சமகளம்

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் முடிவடைந்து ஆறு வருடங்களான பின்னரும் என்னுடைய முழுக்குடும்பத்தையும் இழந்த அதிர்ச்சியிலிருந்து என்னால் மீள முடியாமலுள்ளது என்கிறார் தமிழ்நாட்டில் அகதியாக வாழும் எஸ் சுரேஸ்.

முள்ளிவயாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றனர்.இலங்கை இராணுவம் தப்புவதற்கான பாதைகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்ததால் சிறியளவிலான தமிழர்களால் மாத்திரமே தமிழ்நாட்டிற்கு தப்பிவர முடிந்தது.

2009 யுத்தம் தீவிரமடைந்த வேளை நானும் எனது குடும்பத்தினரும் முள்ளிவாய்க்காலிற்கு அருகில் உள்ள பாடசாலையொன்றில் தஞ்சமடைந்தோம்,ஐ.நா மீட்பு குழுவொன்று அங்கு வந்து எங்களை காப்பாற்றும் என விடுதலைப்புலிகள் தெரிவித்திருந்தனர் என்கிறார் சுரேஸ்.

mulli3
அந்த பாடசாலையில் சுமார் 1000பேரிற்கு மேல் இருந்தோம்,பாடசாலையை அவர்கள் தாக்கமாட்டார்கள் என நாங்கள் எண்ணினோம்,எனினும் அதிகாலை வேலையில் இலங்கை விமானப்படை விமானங்கள் குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டன,எனது தந்தை சகோதரி உட்பட 300 பேர் கொல்லப்பட்டனர்,எங்களால் அவர்களுக்கு இறுதிமரியாதை கூட செய்யமுடியவில்லை என அந்த துயரத்தை சுரேஸ் நினைவு கூறுகின்றார்.

அதன் பின்னர் நாங்கள் எங்கள் உயிரை காப்பாற்ற ஓடும் வழியில் இலங்கை இராணுவத்தினரிடம் சிக்குண்டோம். அவர்கள் என்னை டிரக்டர் ஓன்றில் பிடித்துச்சென்றனர்,அதன் பின்னர் திடீரென எங்களை ஓடச்சொன்னார்கள், நாங்கள் ஓட முயல துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார்கள்,என 37 வயதான அவர் தெரிவித்தார்.
நான் பின்னர் எனது மூத்த சகோதரன் சுட்டுக்கொல்லப்பட்டதை அறிந்தேன். இது வரை எனது தாய்க்கு என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது,என்னை மீண்டும் இராணுவத்தினர் பிடித்தனர். நாங்கள் முகாமொன்றில் அடைக்கப்பட்டோம். நான் அங்கிருந்து தப்பி தலைமன்னாரை அடைந்தேன். எனது கழுத்திலிருந்த தங்க சங்கிலியை கொடுத்து படகு மூலமாக தமிழ்நாடு வந்தேன் என சுரேஸ் தெரிவித்தார்.

எங்களுடைய துயரங்கள் எங்களை நடுக்கடலிலும் தொடர்ந்தன. நான் பயணம் செய் த படகு நடுக்கடலில் மூழ்கியது. இரண்டு நாள் மண்மேடொன்றில் தவித்த பின்னர் இந்திய மீனவர்களால் காப்பாற்றப்பட்டு தனுஸ்கோடிக்கு அழைத்துச்செல்லப்பட்டோம் என்றார் அவர்.தமிழ்நாட்டில் கூலித்தொழில் செய்யும் சுரேஸ் இலங்கையில் தமிழர்கள் வாழமுடியாது. உயிர் ஆபத்து அவர்களுக்கு எப்போதும் உள்ளது என்றார்.