செய்திகள்

முழுமையான நம்பிக்கையுடன் முதலாவது போட்டியில் களமிறங்கும் நியுசிலாந்து

நியுசிலந்து முழுவதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றது,கடந்த வாரங்களில் அதன் கிரி;க்கெட் அணி பல வெற்றிகளை பெற்றுள்ளது,பலவீனமான நிலையிலிருந்து பின்னர் ஆக்ரோசமாக விளையாடி வெற்றிபெற்றுள்ளது.
துணிச்சலான தலைவர் முன்னாள் நின்று வழிநடத்த இரண்டு நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களையும், அச்சுறுத்தலான பந்துவீச்சையும் கொண்டு;ள்ள அணிக்கு இம்முறை சிறந்த வெற்றிவாய்ப்புகள் உண்டென்பது பரவலான கருத்து
பல மைல்களுக்கு அப்பால் உலககோப்பை குறித்து இலங்கையில்பெரும் எதிர்பார்ப்புகள் இல்லை, ஆனால் அந்த கனவுகள் முழுiயாக தகர்ந்துவிட்டன என்றும் தெரிவிக்க முடியாது,
சிம்பாப்வேயுடனான பயிற்சி போட்டியில் தோற்றதை பலர் அபசகுனமாகவே கருதுகின்றனர்.
நியுசிலாந்து அணி கடந்த சில வாரவெற்றிகளுடன் ஆடுகளத்தில் இறங்கவுள்ளது,தங்களது முதல் ஏழு துடுப்பாட்ட வீரர்களில் யாராவது ஒருவர் சிறப்பாக விளையாடுவார் என அணி நம்புவதற்கு காரணங்கள் உள்ளது,
இலங்கை அணி தன்னம்பிக்கையை பற்றவைக்க கூடிய அந்த சிறுபொறிக்காக காத்திருக்கின்றது.
கடந்த காலங்களில் எதிர்பாரத தருணங்களில் அணிக்கு அந்த நம்பிக்கை கிடைத்துள்ளது.இருபதிற்கு இருபது உலககிண்ணத்தில் நியுசிலாந்திற்கு எதிரான போட்டியில் ஹெரத்தின் 5 விக்கெட்கள்,2007 இல் மலிங்கவின் ஒருஓவரில் 4 விக்கெட்கள், போன்றவற்றை குறிப்பிடலாம்
இலங்கை அணியிடம் உலககிண்ணத்தை வெல்ல கூடிய பலமுள்ளதுஆனால் வீரர்களின் தற்போதைய நிலை அந்த நம்பிக்கையை அளிக்கவில்லை.
போட்டி ஆரம்பமாகவுள்ள கிறிஸ்;சேர்ச் மைதானத்தின் வெப்பநிலை 15டிகிரி.மழைக்கான வாய்ப்புகள் உள்ளன.