செய்திகள்

முஸ்லிம் காங்கிரசகு;கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெற்ற 6 உறுப்பினர்கள்

முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பதற்காக சத்தியக்கடதாசியின் மூலமாக தாங்கள் வழங்கிய ஆதரவை, ஆறு உறுப்பினர்கள் வாபஸ் பெற்றுக்கொண்டனர். முஸ்லிம் காங்கிரஸ்  ஆட்சியமைப்பதற்காக மாகாண சபையிலிருக்கின்ற உறுப்பினர்களில் 20 பேர் சத்தியக்கடதாசி மூலமாக தங்களுடைய ஆதரவை தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்தே கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நஷீர் அஹமட் தெரிவுசெய்யப்பட்டார். இந்நிலையில், ஆறு உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் தன்னிச்சையாக செயற்படுவதாக கூறி, ஏனைய இரண்டு கட்சிகளைச்சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் தங்களுடைய ஆதரவை இன்று திங்கட்கிழமை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்களான விமலவீர திஸாநாயக்க, டப்ளியு.டி.எச் வீரசிங்க, ஜயந்த விஜேசேகர, டி.எம்.ஜயசேனவும் கட்சியை சேர்ந்த எம்.எஸ் உதுமாலெப்பை மற்றும் தேசிய காங்கிரஸை சேர்ந்த எம்.எல்.எம். ஆமீர் லெப்பை ஆகியோரே இவ்வாறு வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.