செய்திகள்

மு.க.ஸ்டாலினை கண்டித்து ஜெயலலிதா அறிக்கை

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த போது பயணி ஒருவரை அறைந்ததற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மெட்ரோ ரயிலை முதல்வர் ஜெயலலிதா கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் நேற்று மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். அப்போது சக பயணி ஒருவரை கன்னத்தில் மு.க.ஸ்டாலின் அறைந்ததாக கூறி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின.

மு.க.ஸ்டாலின் பயணி ஒருவரை கன்னத்தில் அறைந்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் பொது இடத்தில் அனைவரும் நடமாடுவதற்கு உரிமை உண்டு. இனிமேலாவது ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கான கண்ணியத்தை ஸ்டாலின் காப்பாற்ற வேண்டும் என்றும் தெரிவித்து கண்டன அறிக்கை ஒன்றை தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.