செய்திகள்

மாற்றியமைக்கப்பட்ட தேசியக் கொடி விவகாரம்: உதய கம்மன்பில கவலை

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு எதிரில் நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, மாற்றியமைக்கப்பட்ட தேசியக் கொடியை தானும் கையில் ஏந்தியிருந்தாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவிற்கு எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட தேசிய கொடிகளை சிலர் கொண்டு வந்திருந்தனர் எனக் குறிப்பிட்ட அவர், அவற்றில் சிறிய கொடிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் ஊடகங்கள் வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டு பொது இடம் ஒன்றில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வோர் பற்றி அதன் ஏற்பாட்டாளர்களுக்கு முழுமையான பொறுப்பை ஏற்க முடியாது எனவும் கம்மன்பில மேலும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், நாட்டின் தேசியக் கொடி தனது தலைமையில் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாற்றியமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டமை குறித்து தான் கவலையடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.