செய்திகள்

மூதூரில் கவனயீர்ப்புப் போராட்டம்

காணாமற்போனோருக்கு உடனடி நிவாரணம் பெற்றுத்தரக்கோரி திருகோணமலை மூதூரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மூதூர் பிரஜைகள் குழு ஏற்பாடு செய்த இந்த கவனயீர்ப்புப் போராட்டம் மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறும், யுத்தத்தின் பின்னர் சரணடைந்து தமது உறவுகளுக்கு என்ன நிகழ்ந்துள்ளது மற்றும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வாசகங்களையும் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.