செய்திகள்

மூன்றாவது தடவையும் மகிந்த போட்டியிட முடியுமா? நீதிமன்றத் தீர்ப்பு இன்று பாராளுமன்றில் வெளியிடப்படும்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பதற்காக உயர் நீதிமன்றம் வழங்கவுள்ள வியாக்கியானம் இன்று திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்‌ஷ மூன்றாவது தடவையாகவும் போட்டியிட முடியுமா என்பது குறித்து உருவாகிய சர்ச்சையையடுத்து அந்த விவகாரம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் கருத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ கோரியிருந்தார். இது தொடர்பான பொது அமைப்புக்களின் கருத்தையும் நீதிமன்றம் கோரியிருந்தது.

இது குறித்த நீதிமன்றத்தின் விளக்கம் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவிருக்கின்றது. இந்த விளக்கம் பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.