செய்திகள்

மூன்று கைக்குண்டுகள் கண்டெடுப்பு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதூர் பகுதியில் உள்ள வீட்டின் வளவில் இருந்து மூன்று கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு புத்தூர் (புதுநகர்) கிராம சேவை பிரிவின் , 6 ஆம் குறுக்கு , இலக்கம், 42/10,யு வீதியில் வசிக்கும் வைரபெருமாள் பரமேஸ்வரன் என்பவரது வீட்டு வளாகத்தில் நேற்று மாலை குடிநீர் குழாய் பதிப்பதற்காக மண் அகழ்வு செய்யும் போது மூன்று கைக்குண்டுகள் காணப்பட்டதை அவதானித்த வீட்டு உரிமையாளரினால் மட்டக்களப்பு பொலிசாருக்கு தகவல் வழங்கியதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவிக்கின்றனர் .

குறித்த கைக்குண்டுகள் தொடர்பாக்க மட்டக்களப்பு பொலிசாருக்கு தகவல் வழங்கியதன் பின் குறித்த இடத்துக்குச் சென்ற மட்டக்களப்பு பொலிஸார் கண்டுபிடிக்கப்பட்ட கைக்குண்டுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .

குறித்த பகுதிக்கு சென்றுள்ள மட்டக்களப்பு மாவட்ட குற்றதடவியல் பொலிஸ் பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

n10

DSC_0399 DSC_0437