செய்திகள்

வித்யாவை கொலைசெய்த மூவரும் சகோதரர்கள்

புங்குடுதீவு மகா வித்தியாலய உயர்தர வகுப்பு மாணவி வித்தியாவை கடத்திய மூன்று சகோதரர்களும் அவரை  மோசமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி சித்திரவதை செய்து கொலை செய்ததுடன் தமது கையடக்க தொலைபேசிகள் மூலம் புகைப்படங்கள் எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த கொலையை செய்த சந்தேகத்தின் பேரில் புங்குடுதீவு 7ஆம் வட்டாரத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களான பூபாலசிங்கம் இந்திரகுமார் ( 40), பூபாலசிங்கம் ஜெயகுமார் (34) மற்றும் பூபாலசிங்கம் தவக்குமார் (32) ஆகிய சகோதரர்கள் நேற்று இரவே பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விட்டனர். இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்க மறியலில் இவர்கள் வைகப்பட்டுள்ளார்கள்.

Vidya Funeral

பாடசாலைக்கு சைக்கிளில் சென்ற வித்யாவை கடத்திச் சென்ற இவர்கள் அவரது பாடசாலை கழுத்துப்பட்டி மற்றும் இடுப்புப்பட்டி ஆகியவற்றை பயன்படுத்தி அவரது கைகள் இரண்டையும் மரத்தின் பின்பாகவும் கால்களை மரத்திலும் கட்டி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் .தெரிவிக்கப்படுகிறது..

வித்யாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் பொலிசாருக்கு சந்தேக அடிப்படையில் வழங்கப்பட்ட தகவலின் பேரில் சகோதரர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதுடன் அவர்களின் கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டன. இவர்களின் வீட்டில் இரத்தக் கறை படிந்த உடுப்புக்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

Protestஇதேவேளை, வித்தியாவின் கொலையை கண்டித்து இன்று தீவுப்பகுதியின் சகல பாடசாலைகளும் மூடப்பட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொட்டும் மழையிலும் வீதிகளில் நின்று ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கொலையாளிகளுக்கு பொது இடத்தில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், அப்பொழுதுதான் இத்தகைய சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் தடுக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.

இந்த கொலை தொடர்பில் பல சமூக அமைப்புக்களும் கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளதுடன், கொலையாளிகளுக்கு உச்ச பட்ச தண்டனை வழங்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.